*அனைவருக்கும் வணக்கம்*
இன்று தமிழ்த் துறையில் ஶ்ரீமத் ஆண்டவன் தமிழிலக்கிய மன்றம் தொடக்க விழா மற்றும் திரு ஆடிப்பூர விழா நடைபெற்றது. செயலர் மற்றும் தாளாளர் C.A.வெங்கடேஷ் R அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சுந்தரமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கலைப் புல முதன்மையர் மற்றும் சமஸ்க்ருதத் துறைத்தலைவர் முனைவர் வீ.இராமன் அவர்கள் "ஆண்டாள் வைபவம்" என்ற பொருண்மையில்சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நிகழ்வின் நிறைவாக ஸ்ரீமத் ஆண்டவன் தமிழிலக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீ.சுஜாதா நன்றியுரை நவின்றார். தமிழிலக்கியம் பயிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் ஆண்டாளின் அருளைப் பெற்றுப் பயனடைந்தனர். நிகழ்வை ஸ்ரீமத் ஆண்டவன் தமிழிலக்கிய மன்ற பொறுப்பாளர் முனைவர் நா.நித்யா தொகுத்து வழங்கினார். முதன்மை துணை முதல்வர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள் மற்றும், துறைத் தலைவர்கள், காட்சித் தொடர்பியல் துறையினர், ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவருக்கும் துறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*நன்றி!*
Comments
Post a Comment