அனைவருக்கும் வணக்கம். தமிழாய்வுத்துறையில் 6.3.2026 அன்று ஸ்ரீமத் ஆண்டவன் தமிழிலக்கியமன்றம் சார்பில் சொல்லரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ம.விஜயலட்சுமி அவா்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழாய்வுத்துறைத்தலைவா் முனைவா் க.சுந்தரமூா்த்தி அவா்கள் தலைமையுரையாற்றினார்..
கலைப்புல முதன்மையா் முனைவா் ச.லட்சுமி அவா்கள் வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு துறை மாணவா்கள் தங்கள் பேச்சுத்திறமையை வெளிப்படுத்தினா். இதில் இளங்கலை மூன்றாமாண்டு வேதியியல் துறை மாணவா் ப.சந்துரு முதல் பரிசு, இளங்கலை மூன்றாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி சு.சாதனா இரண்டாம் பரிசு இளங்கலை இரண்டாமாண்டு வணி்க மேலாண்மைத்துறை மாணவா் சந்தோஷ் ராஜ் பிள்ளை மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள். நிகழ்வின் நிறைவாக, ஒருங்கிணைப்பாளா் முனைவா் ப.கணேஷ்வடிவேல் அவா்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்வு நடைபெறுவதற்கு வாய்ப்பளித்த கல்லூரி செயலா் மற்றும் தாளாளர், ஆலோசகர், முதல்வா், முதன்மை துணை முதல்வா், துணை முதல்வா்கள், கலைப்புல முதன்மையா், புல முதன்மையர்கள், துறைத்தலைவா்கள், மற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Comments
Post a Comment