அனைவருக்கும் வணக்கம்.
இன்று (05.03.2026)நம் கல்லூரியின் குழந்தைகள் நல அமைப்புக் குழுவின் சார்பாக பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வின் முன்னதாக குழந்தைகள் நல அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.திருக்குமார் வரவேற்புரையாற்றினார். நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வி.உபேந்திரன் அவர்கள் தலைமை உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் கே.கோகிலா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு Girls Safety Strong Society என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் நிறைவாக குழந்தைகள் நல அமைப்புக் குழுவின் பொருளாளர் செல்வி ந.துர்கா நன்றியுரை நவின்றார். இந்நிகழ்வு சிறப்புற அமைவதற்கு அனுமதி வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினருக்கும் செயலர் மற்றும் தாளாளர், ஆலோசகர், முதல்வர், முதன்மைத் துணை முதல்வர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments
Post a Comment