21.02.2026 இன்று உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறையில் ஸ்ரீமத் ஆண்டவன் தமிழிலக்கிய மன்றம் சார்பாக நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சுந்தரமூர்த்தி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவுறுத்தலின் படி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி தலைமையுரை யாற்றினார். முதன்மை துணைமுதல்வர் முனைவர் ஜெ.ஜோதி கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். *"தரணிப் போற்றும் தண்டமிழ்"* என்ற பொருண்மையில் முதுகலைத் தமிழிலக்கிய மாணவன் உ.வினித் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நா.நித்யா நன்றியுரை நவின்றார். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீ.சுஜாதா நிகழ்வின் ஏற்பாடுகளை செய்தார். நிகழ்ச்சி சிறப்புற நடைபெறுவதற்கு பல்வகையானும் துணை நின்ற கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர், ஆலோசகர், முதல்வர், முதன்மை துணை முதல்வர், துணை முதல்வர்கள், தேர்வு நெறியாளர், கலைப்புல முதன்மையர், பிற புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏.
Comments
Post a Comment