அனைவருக்கும் வணக்கம். இன்று (27.01.2026) நம் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நெல்லூர் சத்யமூர்த்தி சுப்ரமண்யன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சுந்தரமூர்த்தி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் தலைமை உரையாற்றினார். கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லட்சுமி வாழ்த்துரை வழங்கினார். திருச்சி கே.இராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த.தேவகி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு *இலக்கியங்களில் மனிதநேயம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.திருக்குமார் நன்றியுரை நல்கினார். இந்நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு அனுமதியும் ஊக்கமும் வழங்கிய கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் அவர்களுக்கும் ஆலோசகர், முதல்வர், முதன்மைத் துணை முதல்வர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்ஙனம் முனைவர் க.சுந்தரமூர்த்தி
தமிழ்த்துறைத் தலைவர்
Comments
Post a Comment