*அனைவருக்கும் வணக்கம்* இன்று தமிழ்த்துறையில் ஸ்ரீமத் ஆண்டவன் தமிழிலக்கிய மன்றத்தின்கீழ் ஆண்டாள் இலக்கிய மன்றம் சார்பாக ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் தலைமையுரையாற்றினார். கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லட்சுமி மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை நல்கினார்கள். மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று பாசுரங்கள் ஒப்புவித்து இறையருள் பெற்றனர். முனைவர் சீ.சுஜாதா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் நா.நித்யா நன்றியுரை நவின்றார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த செயலர் மற்றும் தாளாளர், முதல்வர், முதன்மை துணை முதல்வர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், புகைப்படம் எடுத்து உதவிய காட்சித் தொடர்பியல் துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!.🙏🙏🙏
Comments
Post a Comment