இன்று ( *03.09.2025* ) நம் கல்லூரியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி *தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாபெரும் தமிழ்க் கனவு* நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்புச் சொற்பொழிவாளராக பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா வருகை புரிந்திருந்தார்.
*மாபெரும் சபைதனில்* என்ற தலைப்பில் எழுச்சிமிகு உரையாற்றினார். நிகழ்வில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர், திருச்சி தந்தை பெரியார் கல்லூரி முதல்வர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் நிறைவாக நம் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் நன்றியுரையாற்றினார். இந் நிகழ்வில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி, புனிதக் சிலுவை கல்லூரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் நம் கல்லூரி மாணவர்கள் உட்பட 800 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி சிறக்க ஏதுவாக விளங்கிய செயலர் மற்றும் தாளாளர், முதல்வர், முதன்மை துணை முதல்வர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள் , துறைத் தலைவர்கள், கலாப் பிரதக்க்ஷினி கலைக் குழுவினர், நாட்டு நலப்பணித் திட்ட குழுவினர், தொழில்நுட்ப பிரிவினர், காட்சி தொடர்பியல் துறையினர், மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!.
Comments
Post a Comment