இன்று (01.09.2025) நம் கல்லூரியில் குழந்தைகள் நல அமைப்புக் கழகத்தின் துவக்க விழா மற்றும் விழிப்புணர்வுச் சொற்பொழிவு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகள் நல அமைப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.திருக்குமார் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் வி.உபேந்திரன் அவர்கள் தலைமையுரையாற்றினார். குளித்தலை தண்ணீர்ப்பள்ளியில் இயங்கி வரும் இயற்கை தொண்டு நிறுவனத்தின் தலைவர் திருமதி அபிராமி ஸ்ரீதர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைப்பருவ மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வின் நிறைவாக குழந்தைகள் நல அமைப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சுபாஷினி அவர்கள் நன்றியுரை நவின்றார். இந்நிகழ்வு நடைபெறுவதற்கு அனுமதியும் ஊக்கமும் அளித்த கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர், ஆலோசகர் , முதல்வர், மூத்த துணை முதல்வர், துணை முதல்வர்கள், புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments
Post a Comment