இன்று(14.08.25 ) தமிழாய்வுத்துறையில் பாரதி ஆய்வரங்கம் சார்பாக
*சிறப்புச் சொற்பொழிவு* நடைபெற்றது. இந்நிகழ்வில் நம் கல்லூரியின் முன்னாள் மாணவரும் சட்டக்கல்லூரியின் இந்நாள் மாணவியுமான அ.அருணா அவர்கள் *ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்* என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் முன்னதாக,
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. சுந்தரமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நல்கினார். நிகழ்வின் நிறைவாக,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ரா. மதுபாலா நன்றியுரை நவின்றார்.
இந்நிகழ்விற்கு அனுமதி நல்கிய கல்லூரி செயலர், ஆலோசகர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மூத்த துணை முதல்வர், துணை
முதல்வர்கள், கலைப்புல மற்றும் புலமுதன்மையர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். *நன்றி !.*
Comments
Post a Comment